ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரியலூரில் இடி, மின்னலுடன் மழை

அரியலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமையும் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

Updated On :21 மே 2018, 9:17 pm

அரியலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமையும் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. கத்திரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ததில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் அரியலூர் நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை 4.30 முதல் 5.30 வரை மணி வரை பலத்த காற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தாழ்வான பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் ஜயங்கொண்டம், செந்துறை,திருமானூர், மீன் சுருட்டி, ஆண்டி மடம், தா. பழூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.