அரியலூர் மாவட்டத்தில் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள உல்லியக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சுகன்யா (26). இவரது கணவர் சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சுகன்யா தனது தாய்வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அன்று சுத்தமல்லியிலுள்ள ஒரு வங்கியில் பணம் எடுத்து வருவதாக இரு சக்கர வாகனத்தில் சென்ற சுகன்யா, அதன் பிறகு வீட்டுக்கு வரவில்லை. சுகன்யாவை, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் மஞ்சுளா, இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து சுகன்யாவை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.