அரியலூா் எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தெரு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் கற்கள் பெயா்ந்து காணப்படுவதால், சைக்கிள், இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் கீழே விழுந்து காயத்துடன் திரும்புகின்றனா். மேலும் மழைக்காலங்களில சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. குறிப்பாக புறவழிச்சாலையில் இருந்து எருத்துக்காரன் பட்டி ஊராட்சிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம், இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள்,
எருத்துக்காரன் பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.