திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்
By DIN | Published On : 01st April 2019 09:04 AM | Last Updated : 01st April 2019 09:04 AM | அ+அ அ- |

திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என்றார் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகருக்கு வாக்குகேட்டு, அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வெற்றிபெற்றால் திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திருமானூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
பார்ப்பனச்சேரி, மறவனூர், மேலவண்ணம், வெற்றியூர், கள்ளூர், திருமானூர்,திருவெங்கனூர், கீழக்கொளத்தூர், வடுகபாளையம், விழுப்பணங்குறிச்சி,
சுள்ளங்குடி செங்கராயங்கட்டளை, கீழஎசனை, கல்லக்குடி, கருவிடைச்சேரி ஆகிய கிராமங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது, அதிமுக ஒன்றியச் செயலர் குமரவேல்,
தேமுதிக மாவட்டச் செயலர் ராமஜெயவேல், செயற்குழு உறுப்பினர் தங்க.ஜெயபாலன், பா.ம.க., ரவி மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.