ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதே லட்சியம்
By DIN | Published On : 17th April 2019 05:27 AM | Last Updated : 17th April 2019 05:27 AM | அ+அ அ- |

ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதே அனைவரின் லட்சியம் என்றார் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர்,அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தபோது பேசியது: அமலாக்க துறை, வருமானவரித் துறை, சிபிஐ ஆகியவற்றை கொண்டு மிரட்டி நிர்பந்திக்க வைத்த கூட்டணி.
போராட்டத்தில் திமுகவோடு கைகோத்த கட்சிகள்,தற்போது தேர்தலிலும் கூட்டணி வைத்துள்ளோம். இந்துக்களை காப்பாற்றிட திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். பரிசுத்தமான கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. யாரை ஏமாற்ற இந்துக்களின் பாதுகாவலன் என மோடி கூறி வருகிறார்.திருமாவளவன் ஜெயிப்பது முக்கியமல்ல, ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதே லட்சியம் என்றார் அவர். கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...