ஒட்டக்கோவில், கடுகூரில் படைப்புழு கட்டுப்பாடு முகாம்
By DIN | Published On : 26th April 2019 05:19 AM | Last Updated : 26th April 2019 05:19 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில், சாளைக்குறிச்சி, தலையாரிகுடிக்காடு கடுகூர்,பொய்யூர்ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சார்பில் மக்காச்சோள பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் க. பூவலிங்கம் தலைமை வகித்து, மக்காச்சோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு தாக்குதலை கோடை உழவு மூலம் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்தார். முகாமில் வேளாண் அலுவலர் அ. சவிதா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செ. சுந்தரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர் இரா. ஸ்ரீதேவி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.