ஜயங்கொண்டம் அருகே மது விற்றவர் கைது
By DIN | Published On : 26th April 2019 05:18 AM | Last Updated : 26th April 2019 05:18 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மது விற்றவர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை இரவு வாரியங்காவல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மாயவேலுவை (37) கைது செய்தனர்.
மது விற்ற 2 பேர் கைது: ஆண்டிமடம் பகுதியில் மது விற்ற 2 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். ஆண்டிமடம் போலீஸார் புதன்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற வரதராஜன்பேட்டை, ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் (51), ரமேஷ் (49) ஆகிய 2 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.