வெவ்வேறு விபத்து: இருவர் சாவு
By DIN | Published On : 12th February 2019 09:19 AM | Last Updated : 12th February 2019 09:19 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கருப்பிலாக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை கீழப்பழுவூரை அடுத்த வெற்றியூர் அருகே சென்ற போது,அந்த வழியாக வந்த கார் மோதியதில் விஜயகுமார் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (31). அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட காரை
நகர்த்தமாறு நண்பரிடம் ஆனந்த் கூறினாராம். அவர் காரை நகர்த்திய போது எதிர்பாராத விதமாக ஆனந்த் மீது மோதியதில் அங்கேயே உயிரிழந்தார்.
இவ்விரு விபத்துகள் குறித்து கீழப்பழுவூர், அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.