அனைத்து மாவட்ட கருத்தாளர்களுக்கு பாடநூல் சார்ந்த பயிற்சி முகாம்

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டம் குறித்து அனைத்து மாவட்ட கருத்தாளர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கா.சா.மொழியரசி பயிற்சியைத் தொடக்கி வைத்து, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்களின் 100 சதவீதத் தேர்ச்சி மற்றும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெருவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு கருத்தாளர்கள் தங்களது முழுமையான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்றார். 
ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் ஜெ.முருகன் பேசியது:  இந்த பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகமானது எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியரை உருவாக்கும் நோக்கத்தில் முன்னாள் பள்ளிக் கல்விச்செயலர் உதயச்சந்திரன் ஆலோசனைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். சேலம் அரசு கலைக் கல்லூரி இணை பேராசிரியர் அ.தென்னரசு கலந்து கொண்டு வல்லுநராக செயல்பட்டார். பயிற்சியில் 32 மாவட்டங்களிலிருந்து மாவட்டத்துக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 96 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  இப்பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் அவரவர் சார்ந்த மாவட்ட அளவில் நடைபெறும் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடநூலுக்கான பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்படுவார். முடிவில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் க.ராஜா கென்னடி நன்றி தெரிவித்தார். 
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களின் வழிகாட்டுதலின்படி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com