அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது
By DIN | Published On : 06th March 2019 09:19 AM | Last Updated : 06th March 2019 09:19 AM | அ+அ அ- |

ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்ற இருவரை தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அனுமதியின்றி மது விற்கப்படுவதாக தகவல் அறிந்த தா. பழூர் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்றுபார்த்ததில், தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் நெடுஞ்செழியன்(58), அமிர்தலிங்கம் மகன் புஷ்பராஜ்(63) ஆகியோர் தங்களது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில்களை மறைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.