வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம்
By DIN | Published On : 28th March 2019 07:39 AM | Last Updated : 28th March 2019 07:39 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் திருமானூரில் கலைக் குழுவினரின் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
திருமானூரில் நூறு நாள் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்துக்கே சென்ற கலைக்குழுவினர்,அங்கு பணியாளர்களிடம் தங்களது கலைகள் மூலம், தேர்தலில் விடுபடாமல் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும், மேலும் நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடமும், உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் ஒவ்வொருவரின் வாக்கின் உரிமையையும், அதன் பெருமையையும் எடுத்து கூறி கண்டிப்பாக வாக்களிக்க உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரசாரத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் வரவேற்றார்.
இதே போல் வடுகபாளையம், கீழக்குளத்தூர், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...