வாகனத் தணிக்கையில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 08:43 AM | Last Updated : 30th March 2019 08:43 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழப்பழுவூர் தனியார் சிமென்ட் ஆலை அருகே, கூட்டுறவு சார்பதிவாளர் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அரியலூரை சேர்ந்த ரவிந்திரன்(35) என்பவரை சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி ரூ.72,300 எடுத்துச் செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...