அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம்,ஆண்டிமடம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் வெள்ளிக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அரியலூர் மாவட்ட அதிமுக செயலரும், தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம், தேமுதிக மாவட்டச் செயலர் ராம ஜெயவேல்,பாமக துணைத் தலைவர் வைத்தி மற்றும் த.மா.கா. ,பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் பங்கேற்று, சந்திரசேகருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரித்தனர்.
ஆண்டிடம் ஒன்றியத்துக்குள்பட்ட ஸ்ரீராமன்,கருக்கை,வரதராஜன்பேட்டை,தென்னூர், ரெட்டிதத்தூர்,தத்தூர், பெரியகிருஷ்ணாபுரம், ராங்கியம்,விளந்தை,காடுவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.