சிறு தொண்டநாயனாருக்கு அமுது படையல் நிகழ்வு
By DIN | Published On : 05th May 2019 03:27 AM | Last Updated : 05th May 2019 03:27 AM | அ+அ அ- |

திருமானூர் அருகிலுள்ள சாத்தமங்கலத்தில் சிறு தொண்டநாயனாருக்கு அமுது படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
சிவபெருமானுக்கு சிறுதொண்ட நாயனார் அன்னதானம் வழங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் சிறுதொண்ட நாயனார், சிவபெருமான் வேடம் பூண்டு, ஒவ்வொரு வீட்டிலும் உணவுப்பொருள்களை பெற்று உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.