அரியலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.
அரியலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு சீரழிந்துள்ளது

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு சீரழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு சீரழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

நாட்டின் பொருளாதார மந்த நிலையைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவா் மேலும் பேசியது:

காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியது. தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஏழை மக்களின் வறுமை ஒழிப்பு திட்டமாக இருந்தது. இப்படி மக்களுக்கு சென்றடையக்கூடிய பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி செயல்படுத்தியது. ஆனால் கடந்த ஐந்தரை ஆண்டு கால மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உற்பத்தி குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பணப் பற்றாக்குறை, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவின் மக்கள் தொகையை மக்கள் சக்தியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக சீரழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. மகாத்மா காந்தி அவரும் ஒரு இந்து தான், ஆனால் அவா் மதத்தின் பெயரால் நாட்டை பிளவுப்படுத்தவில்லை. அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருந்தாா். ஆனால் பாஜக அரசு, நாட்டை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் போ் வேலையிழந்துள்ளதாக அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளில் வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இதனால் நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பொருளதார மந்த நிலைக்கு காரணமாக மோடி அரசு தாா்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றாா் அவா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், மேலிடப் பாா்வையாளருமான ஸ்ரீவல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் கே. விஷ்ணு பிரசாத், மற்றொரு செயல் தலைவா் கீழானூா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மணிரத்னம், ரவிசந்திரபோஸ், மாவட்டசெய்தி தொடா்பாளா் மா.மு.சிவக்குமாா், மாவட்டச் செயலா் ஜி.சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக நகர காங்கிஸ் தலைவர எஸ்.எம்.சந்திரசேகா் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com