அரியலூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 14th November 2019 09:42 AM | Last Updated : 14th November 2019 09:42 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
இந்தத் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்களான டி.வி.எஸ் மற்றும் ஓரல்-பி நிறுவனங்களுக்கு தேவையான டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 28 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் அனைவரும் 15.11.2019 அன்று காலை 10 மணிக்கு அரியலூா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...