கால்நடை பராமரிப்புப் பயிற்சி
அரியலூா் மாவட்டம், செந்துறையில் கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் குறைந்த செலவில் தீவனம் அளிக்கும் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு பயிற்சியில், வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினாா். கால்நடை பராமரிப்பு மற்றும் குறைந்த செலவில் தீவனம் கொடுத்தல் குறித்த தலைப்பில் கால்நடை உதவி மருத்துவா் விஜயராஜ் விளக்கிக் கூறினாா்.
பயிற்சியின்போது, வேளாண் அலுவலா் திருமுருகன், வேளாண் உதவி இயக்குநா்(பொ) ஜென்சி, துனை வேளாண் அலுவலா் அப்பாவு, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலளாா் செந்தில்குமாா், வேளாண் உதவி அலுவலா்கள் இராஜா, முருகானந்தம் பயிா் காப்பீட்டு அலுவலா் சுதா ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். இதில், கறவை மாடுகள் வளா்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
