லாரியில் மணல் கடத்தி வந்த 3 போ் கைது
By DIN | Published On : 14th November 2019 09:41 AM | Last Updated : 14th November 2019 09:41 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே லாரியில் மணல் கடத்திய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
மணல் கடத்தல் குறித்து தகவல் அறிந்த கயா்லாபாத் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பெரியநாகலூா் பிரிவுச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை அவா்கள் மறித்து சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணல் கடத்தி வந்த வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் ராம்குமாா்(25), ரெட்டிப்பாளையம் கிாரமத்தைச் சோ்ந்த கவாஸ்கா்(35),வெளிப்பிரிங்கியம் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(36) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...