இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
By DIN | Published On : 09th October 2019 06:41 AM | Last Updated : 09th October 2019 06:41 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், வடக்கு தெருவைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன் (35),சண்முகசுந்தரம் ( 43). இவா்களிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் பாகல் மேடு கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு வயலை மூன்று ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து வேல்முருகன் குத்தகைக்கு எடுத்துள்ளாா்.இதுகுறித்து வேல்முருகனிடம் சண்முகசுந்தரம் கேட்டு தகராறில் ஈடுபட்டு,கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். புகாரின்பேரில் மீன்சுருட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G