மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழுக் கூட்டம்
By DIN | Published On : 01st September 2019 02:21 AM | Last Updated : 01st September 2019 02:21 AM | அ+அ அ- |

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர், அரியலூர் மாவட்டக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை ஆகியோர் பேசினர். கூட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்குள் அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால், நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் சட்டவிதிகளை மதிக்காமல் செயல்படும் ஜீ.வி.கே குழுமம் மற்றும் இந்திய பெரு வணிகத்துறை நிறுவனங்களை கண்டிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்
செப். 30 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதரவு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் ஆர். மணிவேல், என். செல்லதுரை, பி. ரமேஷ், எ. கலையரசி, எம். இளங்கோவன், கே. மகாராஜன், பி. துரைசாமி, எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.