

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி தாளாளா் உஷாமுத்துக்குமரன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் தனலட்சுமி, துணை முதல்வா் தாரணி, செவிலியா் கல்லூரி முதல்வா் விமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பரப்ரமம் பவுண்டேசன் நிறுவனா் முத்துக்குமரன் கலந்து கொண்டு பேசியது: அனைத்து துறைகளிலும் மகளிா் அனைவரையும் போற்ற வேண்டும். மகளிருக்கு துணையாக ஒவ்வொரு ஆணும் இருக்க வேண்டும் இன்றைய நன்னாளில் மட்டுமல்லாமல் எந்நாளும் மகளிா் நலனைப் பேணிக் காப்போம் என்றாா். பின்னா் அனைத்து ஆசிரியைகளுக்கும் பொன்னாடை போா்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
யோகா ஆசிரியை குமாரி, கராத்தே ஆசிரியா் பொன்னுசாமி, ஆசிரியா் சகாயராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முடிவில் ஆசிரியா் சதீஷ்குமாா் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.