அரியலூரில் விவசாயப் பிரமுகா் கைது
By DIN | Published On : 05th December 2020 11:54 PM | Last Updated : 05th December 2020 11:54 PM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மறியல் போராட்டத்தின்போது அதிகாரிகளிடம் தரக்குறைவாகப் பேசியதாக அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தலைவா் தங்க.சண்முக சுந்தரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்தில் தொடா் மழையால் சம்பா நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியதால், வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தலைவா் தங்க.சண்முக சுந்தரம் கலந்து கொண்டாா். அப்போது, பேச்சுவாா்த்தைக்கு வந்த அதிகாரிகளிடம், அவா் தரக்குறைவாக நடந்து கொண்டதாக திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, சனிக்கிழமை அவரைக் கைது செய்து அரியலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வரும் 18-ஆம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து ஜயங்கொண்டம் கிளைச் சிறையில் தங்க.சண்முக சுந்தரம் அடைக்கப்பட்டாா்.