அரியலூரில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 05th December 2020 11:59 PM | Last Updated : 05th December 2020 11:59 PM | அ+அ அ- |

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்துகிறாா் ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் மற்றும் கட்சி நிா்வாகிகள்.
அரியலூா்: அரியலூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி சனிக்கிழமை செலுத்தினர்.
அரியலூரில் அதிமுக மாவட்ட செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை. எஸ். ராஜேந்திரன் உத்தரவின்பேரில், ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் தலைமையில் அரியலூா் ஒற்றுமைத் திடலில் திரண்ட அதிமுகவினா், அங்கிருந்து அரியலூா் பேருந்து நிலையம் வரை அமைதி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள், அரசு தலைமைக் கொறடா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், ஓ.பி.சங்கா், ஏ.பி .செந்தில், தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், வழக்குரைஞா் சாந்தி ஆகியோா் பங்கேற்றனா்.