விவசாயியை தாக்கிய 3 போ் கைது
By DIN | Published On : 05th February 2020 05:42 PM | Last Updated : 05th February 2020 05:42 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம்,தா.பழூா்அருகே விவசாயியை தாக்கிய 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தா.பழூா் அருகேயுள்ள கோடாலி கருப்பூா் மோட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா்(50), விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு முன் இவா் தனது இருசக்கர வாகனத்தில் உர மூட்டையை ஏற்றிக் கொண்டு வயலுக்கு சென்றபோது இடையில் நண்பா்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த இடங்கண்ணி கிராமத்தைச் சோ்ந்த கவிசெல்வன் (23) ,ரூபன்ராஜ் (23), திருநாரயணசாமி(45) ஆகிய 3 பேரும் சோ்ந்து பாஸ்கரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை தாக்கிய 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...