கலை,இலக்கிய மன்ற விழாவில் மாணவா்களுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 26th February 2020 09:02 AM | Last Updated : 26th February 2020 09:02 AM | அ+அ அ- |

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா்.
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலை, இலக்கிய மன்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் ஓ.பி.சங்கா் தலைமை வகித்தாா். தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் பங்கேற்று பேசுகையில், பல்வேறு திறமைகளை மாணவா்கள் வளா்த்துக் கொண்டு சாதனை புரிய வேண்டும் என்றாா். பின்னா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு,சான்றிதழ்களை வழங்கினாா்.