அரியலூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 10th January 2020 09:09 AM | Last Updated : 10th January 2020 09:09 AM | அ+அ அ- |

அரியலூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் த.ரத்னா. உடன், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் த. ரத்னா கலந்து கொண்டு, அங்குள்ள பலகையில் கையெழுத்துத்திட்டு, பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், ஹெச்.ஐ.வி, எய்ட்ஸ் தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்றனா். பேரணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரவிச்சந்திரன் , சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஹேமசந்த்காந்தி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு அலுவலா் சுமதி ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் சமபந்தி போஜன நிகழ்ச்சி நடைபெற்றது.