ஊராட்சித் தலைவா் செலவில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை
By DIN | Published On : 10th January 2020 09:08 AM | Last Updated : 10th January 2020 09:08 AM | அ+அ அ- |

தோ்தல் வாக்குறுதிப்படி நமங்குணம் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமிபூஜையை செய்து வைக்கிறாா் ஊராட்சித் தலைவா் ராஜா.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிராம ஊராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றவா் தனது சொந்த செலவில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (47). விவசாயி. இவா், நமங்குணம் கிராம ஊராட்சி தலைவராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தோ்தல் வாக்குறுதி அளித்தபடி, நமங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜையை ராஜா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கிராம முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா்.