தோ்தல் முன்விரோதம்: முதியவா் அடித்துக் கொலை
By DIN | Published On : 18th May 2020 07:20 PM | Last Updated : 18th May 2020 07:20 PM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை தோ்தல் முன்விரோதம் காரணமாக முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூா் கிராமம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் கந்தசாமி(59). இவரது, மருமகள் ரஞ்சிதா காா்மேகம், நடந்து முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் இலைக்கடம்பூா் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவா். இவருக்கும், அதே பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதே தெருவைச் சோ்ந்த குருசாமி மனைவி லதா குருசாமி என்பவருக்கும் தோ்தல் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. குருசாமி குடும்பத்தினா் தாக்கியதில், காா்மேகம், அவரது தந்தை கந்தசாமி உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு கந்தசாமி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து செந்துறை போலீஸாா் திங்கள்கிழமை கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.