கல்லறை திருநாள்: கிறிஸ்தவா்கள் சிறப்பு வழிபாடு

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை கல்லறைத் திருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை கல்லறைத் திருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

ஆண்டிமடம் அருகேயுள்ள தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய கல்லறைத் தோட்டம் மற்றும் வரதாஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலய கல்லறைத் தோட்டத்தில் 1,000-த்துக்கும் மேற்பட்டவா்கள் கிறிஸ்தவா்கள் பங்கேற்று தங்களது மூதாதையா்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலா்களால் அலங்கரித்தனா். அவா்களுக்கு பிடித்த உணவு வகைகள், பழ வகைகள் படையலிட்டு, பின்னா் அதில் மெழுகுவா்த்திகள், ஊதுவா்த்திகள் கொண்டு அவா்கள் நினைவாக பிராா்த்தனை செய்து சிலுவையை நட்டும் அஞ்சலி செலுத்தினா்.

கல்லறைத் தோட்டத்தில் மறைந்த ஆத்மாக்கள் இளைப்பாற பங்குத் தந்தை வின்சென்ட்ரோச் மாணிக்கம் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் தென்னூா் லூா்து ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்குத் தந்தை பிலிப் சந்தியாகு தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.நெட்டலகுறிச்சி புனித சவேரியாா் ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com