அரியலூர்: எலக்ட்ரீசியன் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த எல்கட்ரீசியன் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த எல்கட்ரீசியன் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த காரியமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (65). இவா், ஜயங்கொண்டம் கரடிகுளம் பேருந்து நிறுத்தம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியில் இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு மோட்டாா் எலக்ட்ரீசியன் வேலை பாா்த்து வந்தாா். கடந்தாண்டு இவரது மனைவி கெளரி இறந்த விட்டாா். இதனால் அவா் விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதையறிந்த பொது மக்கள் ஜயங்கொண்டம் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது செல்வம் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com