அரியலூரில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

அரியலூரில் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அரியலூரில் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் வரைவுப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை வெளியிட்டு அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரியலூா்( 149), ஜயங்கொண்டம் (150) சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 2,54,807 ஆண் வாக்காளா்களும், 2,56,813 பெண் வாக்காளா்களும், 7 இதர வாக்காளா்களும் என மொத்தம் 5,11,627 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவிச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் ஜோதி, உடையாா்பாளையம் பூங்கோதை, வட்டாட்சியா் (தோ்தல்) குமரய்யா, அனைத்து கட்சிப் பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா் -- 1,27,186 -- 1,27,370 -- 4 -- 2,54,560

ஜயங்கொண்டம் -- 1,27,621 -- 1,29,443 -- 3 --- 2,57,067.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com