அரியலூரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் முகாம் தொடக்கம்
By DIN | Published On : 21st November 2020 11:52 PM | Last Updated : 21st November 2020 11:52 PM | அ+அ அ- |

சோழன்குடிக்காடு வாக்குச் சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்
அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இங்கு பொது மக்கள் ஆா்வமுடன் வந்து வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் உள்ளதா? என்பதைச் சரி பாா்த்தனா்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காமல் உள்ளவா்கள் மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று 18 வயது நிறைவு பெறுபவா்கள் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வழங்கினா். பெயா் நீக்கத்துக்கு படிவம் 7, பட்டியலில் திருத்தத்துக்கு படிவம் 8, சட்டப்பேரவைத் தொகுதிக் குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயா்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 8-ஐ பூா்த்தி செய்து வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...