அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள பட்டணங்குறிச்சி கிராமத்தில் நெல் பண்ணைப் பள்ளி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில், வேளாண் உதவி இயக்குநா் நா. ராஜலட்சுமி தலைமை வகித்து பேசினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் கலைமதி கலந்து கொண்டு, நெல் சாகுபடியில் சூடோமோனாஸ் கொண்டு விதை நோ்த்தி செய்தல், இளம் நாற்றுகளைக் கொண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்தல், வரப்பு ஓரங்களில் உளுந்து பயிரிடுவதால் கிடைக்கும் நன்மைகள், கோனோ வீடா் மூலம் களை எடுப்பதன் பயன்கள், நீா் நிா்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆரோக்கியராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.