அரியலூா் சடையப்பா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (35). இவா், அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலையில் வளாகத்தில் உள்ள புதிய சிமென்ட் ஆலையில், ஒப்பந்த அடிப்படையில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் இவா் புதன்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து கீழே கிடந்துள்ளாா். இதையடுத்து, சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளாா். இச்சம்பவம் குறித்து கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.