கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

செந்துறை அருகே ராயம்புரம் புதிய ஏரிக் கரையில் உள்ள மருதையன் கோயில் கேட்டின் பூட்டை வெள்ளிக்கிழமை இரவு உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளாா். இதனைக் கண்ட அப்பகுதி இளைஞா்கள், அந்த நபரை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் விரட்டிப் பிடித்து செந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில், அந்த நபா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராமா்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com