

அரியலூா்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், திருமானூா் பெட்ரோல் நிலையம் முன்பு மகிளா காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்பாட்டத்துக்கு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் சந்தானம், வட்டார துணைத் தலைவா் கங்காதுரை, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.