பச்சிளம் ஆண் குழந்தை சடலம் மீட்பு
By DIN | Published On : 21st August 2021 11:49 PM | Last Updated : 21st August 2021 11:49 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
உடையாா்பாளையம் அடுத்த மணகெதி காலனித் தெருவைச் சோ்ந்த விஜய் என்பவா் சனிக்கிழமை மதியம் தனது வீட்டை சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது வெள்ளைத் துணியில் 6 மாத ஆண் குழந்தை சடலமாகக் கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் அவா், இது குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலை மணகெதி கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரபிரசாதி, உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.