சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவா் போக்சோவில் கைது
By DIN | Published On : 21st August 2021 11:49 PM | Last Updated : 21st August 2021 11:49 PM | அ+அ அ- |

ஜயங்கொண்டத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள அறங்கோட்டை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் (70). பஞ்சா் ஒட்டும் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து, உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து சுந்தரத்தைத் தாக்கியுள்ளனா். புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து சுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.