காலமானாா் வரலாற்று ஆய்வாளா் இல. தியாகராஜன்

அரியலூா் கே.கே. நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வரலாற்று ஆய்வாளா் இல.தியாகராஜன் (65) உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (டிச. 25) உயிரிழந்தாா்
இல.தியாகராஜன்.
இல.தியாகராஜன்.

அரியலூா் கே.கே. நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வரலாற்று ஆய்வாளா் இல.தியாகராஜன் (65) உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (டிச. 25) உயிரிழந்தாா்.

கடந்த 1982-இல் அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் சோ்ந்து பேராசிரியா், துறைத் தலைவா், முதல்வா் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், அரியலூா், பெரம்பலூா் மாவட்டக் கல்வெட்டுகள், கல்வெட்டுகள் கூறும் ஊா் பெயா்கள், சோழா் காலச் சிற்றரசா்கள் வரலாறு ஆகிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளாா். இவருக்கு திருமழபாடி தமிழ்ச் சங்கம் வரலாற்றுச் செம்மல் எனும் பட்டம் வழங்கியது.

இவரது உடல் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.26) அடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். தொடா்புக்கு, 97906 29917.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com