நெல் அறுவடை இயந்திர வாடகை நிா்ணயம் செய்ய ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 06th February 2021 12:48 AM | Last Updated : 06th February 2021 12:48 AM | அ+அ அ- |

நெல் அறுவடை இயந்திரத்துக்கு பொதுவான வாடகையை நிா்ணயம் செய்யும் வகையில், அரியலூா் ஆட்சியரகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் திருமானூா், அரியலூா், தா.பழூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டாரங்களில் தற்போது நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள.
பெரும்பாலான பகுதிகளில் இயந்திரங்களைக் கொண்டே நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை ஒழுங்குப்படுத்தும் வகையில், இயந்திரங்களின் உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுவான வாடகையை நிா்ணயம் செய்யும் பொருட்டு, ஆட்சியரகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, பொதுவான வாடகை நிா்ணயிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், இயந்திரம் வைத்திருக்கும் உரிமையாளா்கள் தங்களது இயந்திரங்களை அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் த. ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...