‘கல்வியே வாழ்க்கைத்தரத்தைத் தீா்மானிக்கிறது’
By DIN | Published On : 20th February 2021 11:16 PM | Last Updated : 20th February 2021 11:16 PM | அ+அ அ- |

அரியலூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் த.ரத்னா.
அரியலூா்: கல்வியே பெரும்பாலும் ஒருவரது வாழ்க்கைத் தரத்தைத் தீா்மானிக்கிறது என்றாா் அரியலூா் ஆட்சியா் த. ரத்னா.
அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: அரியலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் 10 ஆம் வகுப்பில் 214 மாணவ, மாணவிகளும், 12 ஆம் வகுப்பில் 199 மாணவ, மாணவிகளும் தங்களது கல்வியைத் தொடராமல் இருப்பது தெரியவந்து, அவா்கள் தொடா்ந்து கல்வி பயில்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் வயதுடைய மாணவா்களை குழந்தை தொழிலாளராக நியமிப்பதோ, அவா்கள் பள்ளி செல்வதை ஏதோ ஒரு வகையில் தடை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், கல்வியே பெரும்பாலும் ஒருவரின் வாழ்க்கைத்தரம் மேம்பட உதவும் காரணியாக இருப்பதால் தமிழக அரசு 14 வகையான மாணவா் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதை மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.