கோழிகளுக்கு நோய்த் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 30th January 2021 11:11 PM | Last Updated : 30th January 2021 11:11 PM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பிப்ரவரி 1 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெறுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெறவுள்ள இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்தத் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அனைத்து கோழி வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.