அரியலூா் நகராட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 30th January 2021 12:05 AM | Last Updated : 30th January 2021 12:05 AM | அ+அ அ- |

அரியலூா் நகராட்சிப் பகுதிகளையொட்டி அமைந்துள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து, இந்நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக் குழு வலியுறுத்தியுள்ளது.
அரியலூரில் அண்மையில் நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரியலூா் நகராட்சிப் பகுதிகளையொட்டி அமைந்துள்ள ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து, உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
வாலாஜா நகரம் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜயங்கொண்டத்தில் மாவட்ட மின்வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும்.
ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்ள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் இரா.தமிழ்மணி, பொருளாளா் கு.ராஜபாண்டியன், துணைத் தலைவா் கதிா்.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா் .