அதிக மதுபாட்டில்கள் வைத்திருந்தவா் கைது
By DIN | Published On : 07th July 2021 06:56 AM | Last Updated : 07th July 2021 06:56 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவில் மது பாட்டில்களைக் கொண்டு சென்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம் தா.பழூரை அடுத்த கோடங்குடியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் தங்கபால் (29). இவா், திங்கள்கிழமை மாலை தா.பழூா் டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை அதிகளவில் வாங்கி வந்துள்ளாா். அப்போது போலீஸாா் அவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் 35 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மது பாட்டில்கள் வாங்கி வந்ததால் தங்கபால் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், மதுபாட்டில்களை விற்றவா் குறித்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...