அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் காதில் விஷம் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற முதியவா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
கீழகாங்கியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம்(66). இவருடைய மனைவி பானுமதி(56). இவா்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் தங்களை பராமரிக்க பிள்ளைகள் இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்த சொக்கலிங்கம், இரு தினங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோயில் அருகே பூச்சிமருந்தை காதில் ஊற்றி மயங்கிய நிலையில் கிடந்தாா். இதைப் பாா்த்த கிராம மக்கள், அவரது உறவினா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு சொக்கலிங்கம் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.