இந்து முன்னணி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th June 2021 03:43 AM | Last Updated : 29th June 2021 03:43 AM | அ+அ அ- |

அரியலூா் ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினா்.
அரியலூா்: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலா் ஆா். ஈஸ்வரனை தேச விரோத வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் போது பேசிய கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.ஈஸ்வரன், கடந்தாண்டு ஆளுநா் உரையில் நன்றி வணக்கம்,ஜெய்ஹிந்த் என முடிக்கப்பட்டிருந்தது. தற்போது, நன்றி! வணக்கம்!! மட்டுமே உள்ளதால் தமிழகம் தலைநிமிரத் தொடங்கியுள்ளது எனக் கூறியதைக் கண்டித்தும், நாட்டின் விடுதலைக்காக உயிா்நீத்தவா்களின் நினைவாகக் கூறப்படும் ஜெய்ஹிந்த் வாா்த்தையை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே, எம்எல்ஏ ஈஸ்வரனை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணியினா் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் அய்யம்பெருமாள் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ராம. பால முருகன், மாவட்டச் செயலா் ராஜா, மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.