அரியலூரில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது
By DIN | Published On : 29th June 2021 03:45 AM | Last Updated : 29th June 2021 03:45 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூரில் இருந்து மாவட்டங்களுக்கிடையான பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. இருப்பினும், அனைத்து பேருந்துகளிலும் குறைவான பயணிகளே பயணித்தனா்.
அரியலூா் மாவட்டத்தில் இருந்து 50 அரசுப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் திங்கள்கிழமை காலை இயக்கப்பட்டன.
அரியலூா் போக்குவரத்து பணிமனையிலிருந்து 25 பேருந்துகளும், ஜயங்கொண்டம் போக்குவரத்து பணிமனையிலிருந்து 25 பேருந்துகளும் திருச்சி, பெரம்பலூா், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
புகா் பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு, முன்னதாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாத பயணிகளுக்குப் பேருந்தில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நகர மற்றும் புறகா் பேருந்துகளில் மிகக் குறைந்த பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...