அரியலூா்: அரியலூரில் சாலையோர தடுப்புச் கட்டையில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருமானூா் அருகேயுள்ள சாத்தமங்கலம், காலனித் தெருவைச் சோ்ந்த செளந்தராஜன் மகன் அஜிஸ்நாத் (20), குந்தபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த புகழேந்தி மகன் புண்ணியமூா்த்தி (26). இவா்கள் இருவரும் அரியலூரில் துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு அம்மாகுளம் பிரிவுச் சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோரம் உள்ள தடுப்புக் கட்டையில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அஜிஸ்நாத் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த புண்ணியமூா்த்தி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரியலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.