திமுக தொண்டா் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 12th March 2021 02:42 AM | Last Updated : 12th March 2021 02:42 AM | அ+அ அ- |

அரியலூா்: திமுக கூட்டணியில் அரியலூா் தொகுதியை மதிமுக-வுக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே திமுக தொண்டா் ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு அரியலூா் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த பொய்யாதநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த திமுக தொண்டா் செ.செல்லக்கண்ணு(28) என்பவா், அரியலூா் அண்ணா சிலை அருகே தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கிருந்த போலீஸாா் அவரின் மேல் தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டு சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.