மதிமுக வேட்பாளருக்கு வாக்குசேகரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்
By DIN | Published On : 25th March 2021 10:03 AM | Last Updated : 25th March 2021 10:03 AM | அ+அ அ- |

திருமானூா் பேருந்து நிலையத்தில் அரியலூா் தொகுதி மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பாவுக்கு வாக்கு சேகரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பாவுக்கு ஆதரவாக, திருமானூா் பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருமானூா் பேருந்து நிலையம், கடைவீதி மற்றும் கிராமப் பகுதிகள், முடிகொண்டான், கோவில்எசனை உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து, உதயசூரியனுக்கு வாக்கு கேட்டனா்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா வெற்றிப் பெற்றவுடன், திருமானூா் பகுதி மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து, பொதுமக்களிடம் பிரசாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஈடுபட்டனா்.
கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் எசனை கண்ணன், நகரச் செயலா் ஜெய்கணேஷ், மகளிரணிச் செயலா் இந்திராகாந்தி மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.